என்னை அழகு என்று யாரும் சொன்னதில்லை

|

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
'யாரும் என்னை அழகு என்று சொன்னதில்லை' என்றார் இந்தி கவர்ச்சி நடிகை பிபாஷா பாசு. பாலிவுட் ஹீரோயின் பிபாஷா பாசு தலை தென்பட்டாலே போட்டோ பிளாஷ்கள் கண்ணை பறிக்கும். ஆனால் அவரது இளமை பருவம் அப்படி இல்லை என்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது: சிறுமியாக இருந்தபோது நான் அழகாக இருப்பதாக யாரும் சொன்னதில்லை. குள்ளமாக, கறுப்பாக, குண்டாக இருப்பேன். என்னைப் பார்த்ததும் கிண்டலும் கேலியும் செய்வார்கள். மனதுக்குள் அழுவேன். நடிகை ஆவேன் என்று கொஞ்சமும் நினைக்கவில்லை.

டாக்டர் ஆகவேண்டும் என்ற லட்சியத்துடன் படித்தேன். உயிரியல் பரிசோதனை கூடத்தில் எலியை அறுத்து பாகங் களை குறிக்கச் சொன்னபோது அதிர்ச்சியில் மயங்கி விழுந்துவிட்டேன். அத்துடன் எனது டாக்டர் லட்சியமும் முடிவுக்கு வந்தது. ஒரு சில தோழிகளின் வழிகாட்டுதல்படி பேஷன் ஷோக்களில் கலந்துகொண்டேன். அது எனக்கு ஆச்சர்யமான பலனை அளித்தது. 2001ம் ஆண்டு திரையுலகுக்கு வந்தேன்.

இப்போது என்னை அழகு என்று புகழாதவர்கள் கிடையாது. இளமையில் அழகில்லை என்று கேலி செய்யப்பட்ட நானா இப்படி இருக்கிறேன் என்று எனக்கே ஆச்சர்யம். அழகில்லை என்று யாரும் வருந்தாதீர்கள். ஒருநாள் இந்த உலகம் உங்களை அழகு என்று நிச்சயம் பாராட்டும். அதுவரை உங்கள் உழைப்பை நிறுத்தாதீர்கள்.


 

Post a Comment