நண்பன் படத்திற்கு பிறகு கோலிவுட்டில் நல்ல பெயரை எடுத்திருக்கும் சத்யன், கதை பிடித்திருந்தால் மட்டுமே இனி கால்ஷீட் என்று கூறி வருகிறாராம். ஏன்.. இந்த திடீர் மாற்றம் என அவரிடம் கேட்டதற்கு.. 'நண்பனில் கிடைத்த நல்ல பெயரை.. நிறைய படங்கள் செய்வதன் மூலம் காலி பண்ணக் கூடாது' என்று பதில் சொல்கிறார் சத்யன். இதனையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் துப்பாக்கி. இந்த படத்திற்காக மொத்தம் 55 நாட்கள் கால்ஷீட் தந்துள்ளார் நம்ம சத்யன். நண்பனைப் போல இதுவும் தனது கேரியரின் முக்கியமான படம் என்று அவர் நம்புவதால்தான் இந்த தாராளம்.
Post a Comment