மீண்டும் கதை கேட்க ஆரம்பித்தார் ஐஸ்வர்யா ராய்!

|


புகழின் ஒட்டு மொத்த வெளிச்சமும் தன்மீதே இருக்கும்படி பார்த்துக் கொண்ட நடிகை என்றால் அது ஐஸ்வர்யா ராய்தான். அதுவும் ஒரு ஆண்டோ இரண்டாண்டோ அல்ல... கிட்டத்தட்ட 15 ஆண்டுகள்...

அப்படிப்பட்டவர் திடீரென்று குழந்தை, குடும்பம், ரெஸ்ட் என்று அடைபட்டுக் கிடப்பாரா என்ன... இதோ, குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் முடியும் முன்பே, அடுத்த படத்துக்கான கதையைக் கேட்க ஆரம்பித்துள்ளார்.

எப்படியும் நாளையே நடித்துவிடப் போவதில்லை. கதை கேட்டு, நடிகர்கள் முடிவாக படம் தொடங்க குறைந்தது 6 மாதங்களாவது ஆகும்... அதற்குள் பழைய வனப்பையும் உடல்நிலையையும் பெற்று விடுவோம் என்ற நம்பிக்கைதான் ஐஸ்வர்யாவுக்கு.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடம்தான் என்றல்ல, ஆக்ஷன் த்ரில்லர் கதைகளாக இருந்தாலும் ஓகே என்று கூறியுள்ளதால், முன்பு ஐஸ்வர்யா ராயை மனதுக்குள் 'ஃபிக்ஸ்' பண்ணி வைத்திருந்தவர்கள் மீண்டும் தங்கள் கதைகளை தூசு தட்ட ஆரம்பித்துள்ளனர்.

சமீபத்தில் அபிஷேக் பிறந்த நாள் விழாவுக்கு வந்த பலரும், அபிஷேக்கு வாழ்த்து சொல்வதைவிட, ஐஸ்வர்யாவுக்கு கதை சொல்ல எப்போது வரட்டும் என்று கேட்பதிலேயே ஆர்வம் காட்டினார்களாம்.

இது தெரிஞ்சிருந்தா, இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணியிருக்கலாமே என்று யோசிக்கிறாராம், முன்பு ஐஸ்வர்யா ராயை ஹீரோயினாகப் போட்டு, பின் அவர் கர்ப்பம் என்பதால் படத்தையை கைவிட்ட மதுர் பண்டார்கர். இப்போது அந்தப் படத்தில் கரீனா நடிப்பது குறிப்பிடத்தக்கது.
 

Post a Comment