சிசிஎல் கிரிக்கெட் போட்டியில் வென்ற சென்னை ரைனோஸ் அணியினருக்கு மெடல் வழங்கும் விழா, சென்னையில் நேற்று நடந்தது. அணி உரிமையாளர் கங்கா பிரசாத் வழங்கினார். ஸ்ரீகாந்த், விக்ராந்த், ரமணா, விஷ்ணு, சாந்தனு, பிருத்வி பாண்டியராஜன், சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர். அணி கேப்டன் விஷால் பேசியதாவது: எங்கள் அணி ஜெயித்தது சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கிறது. கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பது, எங்களை மாதிரி நடிகர்களுக்கு வித்தியாசமான அனுபவம். இந்தியாவிலுள்ள எல்லா மொழி நடிகர்களும் ஒன்றாக இணையும் வாய்ப்பு இதுபோன்ற விளையாட்டுகளில்தான் அமையும். நடிகர்களுக்கு நடிக்க மட்டும்தான் தெரியும் என்ற இமேஜை, கிரிக்கெட் விளையாடி வெற்றிபெற்று உடைத்தெறிந்து இருக்கிறோம். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எங்களுக்கு நடிப்பு தவிர இன்னொரு திறமையும் இருக்கிறது என்பதை மக்கள் முன் நிரூபித்து விட்டோம். சிசிஎல் போட்டி ஒவ்வொரு வருடமும் ஜனவரியில் தொடங்கும்.
Post a Comment