எனது படத்தில் தீபிகாவை நடிக்க வைப்பேன் : பாலிவுட் தயாரிப்பாளர் சவால்

|

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
என்ன நடந்தாலும் தீபிகா 'ரேஸ் 2' படத்தில் நடித்தே தீர வேண்டும். அவரை நடிக்க வைப்பேன் என பாலிவுட் தயாரிப்பாளர் சவால் விட்டுள்ளார். பாலிவுட் தயாரிப்பாளர் ரமேஷ் துரானி தயாரிக்கும் 'ரேஸ் 2' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு பின்னர் நடிக்க மறுத்து வெளியேறினார் தீபிகா படுகோன். தமிழில் 'கோச்சடையான்' படத்தில் அவர் நடிக்க உள்ளார். இதற்காகவே 'ரேஸ் 2'விலிருந்து அவர் விலகியதாக கூறப்படுகிறது. இது பற்றி துரானி கூறும்போது,"அவரது 4 மாத கால்ஷீட்டை நான் வீணடித்துவிட்டதாக கூறுகிறார். ஆனால் அந்த நேரத்தில் 'தேசி பாய்ஸ்' மற்றும் 'காக்டெய்ல்' படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்தார். பின்னர் எங்களை சந்தித்த தீபிகாவின் மேனேஜர், 'தீபிகாவுக்கு ஹாலிவுட் பட வாய்ப்பு வந்துள்ளது. எனவே ரேஸ் 2 படத்தில் அவர் நடிக்க விரும்பவில்லை' என்றார். பலமுறை நேரில் சந்தித்து பேச முற்பட்டபோது என்னை பார்க்காமல் தவிர்த்தார். இதுவரை எவ்வளவோ பெரிய நடிகர்களை வைத்து படம் எடுத்திருக்கிறேன். யாரிடமும் இப்படி பிரச்னை ஏற்பட்டதில்லை. தீபிகாவிடம் அவமானப்பட்டதுபோல் வேறு யாரிடமும் அவமானப்படவில்லை. இதையடுத்துதான் அவர் மீது புகார் கொடுத்தேன். என்ன விலை கொடுத்தாவது அவரை நடிக்க வைத்தே தீருவேன்" என்றார்.


 

Post a Comment