திரையுலகம் நாளை ஸ்தம்பிக்கிறது

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சினிமா துறைக்கு மத்திய அரசு விதித்துள்ள சேவை வரியை ரத்து செய்யக்கோரி இந்திய முழுவதும் நாளை சினிமா ஷூட்டிங், காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. திரையுலகிற்கு மத்திய அரசு 30 சதவீதம் சேவை வரி விதித்திருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் நாளை சினிமா ஷூட்டிங், காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. ஸ்டுடியோ, தியேட்டர்கள் ஒரு நாள் ஸ்தம்பிக்கிறது.

இதுபற்றி இந்திய திரையுலக சம்மேளன தலைவர் வினோத் கே.லப்பா கூறும்போது, "சினிமாவுக்கு ஏற்கனவே என்டர்டெயின்மென்ட் டாக்ஸ் எனப்படும் கேளிக்கை வரி விதிக்கப்பட்டு வருகிறது. இன்னொரு வரி விதிக்கப்படுவதை ஏற்க முடியாது. எனவே சேவை வரியை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி நாளை (வியாழன்) இந்தியா முழுவதும் தியேட்டர்கள் மூடப்படுகிறது. ஸ்டுடியோக்களும் மூடப்படுவதுடன் அனைத்து ஷூட்டிங்கும் ரத்து செய்யப்படுகிறது. சினிமா சம்பந்தப்பட்ட அனைத்து அமைப்புகளும் ஒருநாள் மட்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறது" என்றார்.

இதுகுறித்து ஆலோசனை செய்ய தமிழ் திரையுலகினர் பங்கேற்ற கூட்டம் நேற்று பிலிம்சேம்பரில் நடந்தது. தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பெப்சி செயலாளர் ஜி.சிவா, திரை அரங்கு உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன், இந்திய திரைப்பட சம்மேளன துணைத்தலைவர் எல்.சுரேஷ், இயக்குனர்கள் சங்க செயலாளர் அமீர், தமிழ்நாடு திரை அரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் அவர்கள் கூறும்போது, "திரையுலகம் ஏற்கனவே பல சுமைகள் காரணமாக நலிந்திருக்கிறது. சேவை வரிவிதிப்பால் மேலும் பாதிப்புக்குள்ளாகிறது. எனவே இந்தியா முழுவதும் நாளை நடக்கவுள்ள திரையுலக போராட்டத்தில் தமிழ் திரையுலகை சேர்ந்த அனைத்து அமைப்புகளும் பங்கேற்கும். அதன்படி சினிமா படப்பிடிப்பு, தியேட்டர்களில் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படும். சேவை வரியால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி சென்னை பிலிம்சேம்பரில் பொதுக்கூட்டம் நடக்கிறது. காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை கூட்டம் நடக்கும்" என்றனர்.


 

Post a Comment