நல்ல கதைகள் அமையாததுதான் தமிழில் நடிக்காததற்கு காரணம் என்று தமன்னா கூறினார். அவர் மேலும் கூறியதாவது: ராம் சரணுடன் ரச்சா, பிரபாஸுடன் ரிபெல், ராமுடன் தமிழ், தெலுங்கில் வெளியாகும் 'எதுகண்டே பிரேமண்டா' படங்களில் நடித்துவருகிறேன். ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிப்பதால் அதிகப் படங்களில் நடிப்பதாக அர்த்தம் இல்லை. ஒரே நேரத்தில் ஏழு படங்களில் நடிக்கும் ஹீரோயின்களும் இருக்கிறார்கள். அதில் எனக்கு உடன்பாடில்லை. கவனமே செலுத்தமுடியாமல் அதிக படங்களில் நடிப்பதால் என்ன பயன் கிடைத்துவிடும்? சமீப காலமாக தமிழில் ஏன் நடிக்கவில்லை என்று கேட்கிறார்கள். தெலுங்கில் பிசியாக இருப்பது ஒரு காரணம் என்றாலும் நல்ல கதைகள் அமையவில்லை என்பதுதான் உண்மை. வருகிற எல்லா கேரக்டரையும் ஏற்றுக்கொண்டு என்னால் நடிக்க முடியாது. ஆனாலும் சிறந்த கதைக்கு காத்திருக்கிறேன். இவ்வாறு தமன்னா கூறினார்.
Post a Comment