ஒத்துழைக்க மறுக்கிறார் - தமன்னா மீது தெலுங்கு தயாரிப்பாளர்கள் குற்றச்சாட்டு

|


அடிக்கடி கால்ஷீட் சொதப்புவதாகவும், ஒப்புக் கொண்டபடி அவர் ஒத்துழைப்பு தருவதில்லை என்றும் தயாரிப்பாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழில் போன வருடம் வரை ஓஹோவென்று செல்வாக்குடன் இருந்த தமன்னா, சிறுத்தையில் கார்த்தியுடன் நடித்த பிறகு காணாமல் போய்விட்டார்.

தமிழில் சுத்தமாக வாய்ப்பில்லை. தன்னை அறிமுகப்படுத்திய தெலுங்குக்கே மீண்டும் போனார். அங்கே நிறைய படங்கள் ஒப்புக் கொண்டார்.

இப்போது அங்கு கால்ஷீட் தருவதில் குளறுபடி செய்வதாக தமன்னா மீது தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

'ராச்சா', 'எந்துகட்தே', 'பிரேமந்தா ரீபெல்' ஆகிய மூன்று தெலுங்கு படங்களில் நடிக்கிறார். இப்படங்களை முடித்து கொடுத்து விட்டுத்தான் வேறு படங்களில் நடிப்பேன் என்று உறுதிமொழி அளித்திருந்தாராம்.

ஆனால் இவற்றை முடிப்பதற்கு முன்பே மகேஷ்பாபு ஜோடியாக நடிக்க புதுப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இது ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

தமன்னாவின் கால்ஷீட் குளறுபடியால் 'ராச்சா' படம் முடியாமல் கிடக்கிறதாம். மற்ற தயாரிப்பாளர்களும் தங்கள் படத்தை முடிக்கும்படி வற்புறுத்துகின்றனர்.

எனவே தமன்னா மீது புகார் தர முடிவெடுத்துள்ளார்களாம். ஆனால் இந்தப் புகார்களை மறுத்துள்ள தமன்னாவின் தந்தை, தன் மகள் அனைத்து தயாரிப்பாளர்களையும் சமமாக நடத்துவதாகவும், இன்னும் மகேஷ்பாபு படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை என்றும் கூறினார்.
 

Post a Comment