என் காதலை படமாக்குவதா

|

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
'என் காதல் கதையை படமாக்க யாருக்கும் உரிமை இல்லை' என்று முன்னாள் காதலனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் தீபிகா படுகோன்.பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன். தமிழில் ரஜினி ஜோடியாக 'ராணா'வில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். தீபிகாவின் முன்னாள் காதலன் பாலிவுட் ஹீரோ நிஹர் பாண்டே. ஆண்டுக்கணக்கில் காதல் பறவைகளாக வலம் வந்த இவர்கள் திடீரென்று பிரிந்தனர்.இந்நிலையில் நிஹர் பாண்டே, தீபிகாவுடன் தனது காதல் அனுபவ கதையை பிரபல இயக்குனர் பிரசாந்த் சாத்தாவுக்கு விற்றிருக்கிறார். அதில் அவரே ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். படத்துக்கு 'தீபிகா ஓ மை டார்லிங்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதையறிந்த தீபிகா கடும் கோபம் அடைந்தார். 'இது கீழ்த்தரமான ரசனை. மற்றொருவரின் காதல் வாழ்க்கையை படமாக்க வேறு யாரோ ஒருவர் எப்படி முடிவு செய்யலாம். இதற்கு யாரிடம் அனுமதி வாங்கினார்கள். இதை என்னால் ஏற்க முடியாது' என்று கூறி உள்ளார். பாலிவுட்டில் நடிகைகளின் காதல் வாழ்க்கை படமாவது இதுமுதல்முறை அல்ல. சுஷ்மிதா சென், பர்வீன்பாபி போன்றவர்களின் உண்மை காதல் கதைகள் ஏற்கனவே இதுபோல் படமாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


 

Post a Comment