கோச்சடையான் படத்தில் ரஜினியின் நிறத்துக்கு ஏற்ப தீபிகா படுகோனுக்கு கருப்பு மேக்கப் எதுவும் போடவில்லை என்று பட அதிபர் கூறினார். ரஜினி நடிக்கும் படம் கோச்சடையான். தீபிகா படுகோன் ஜோடி. இதில் ரஜினியின் நிறத்துக்கு ஏற்ப தீபிகாவின் தோல் நிறத்துக்கு கருப்பு மேக்கப் போடப்படுகிறது என்று செய்தி வெளியானது. இது குறித்து படத்தின் இணை தயாரிப்பாளர் முரளி மனோகர் கூறியது: இந்தியாவிலேயே முதன்முறையாக மோஷன் கேப்சர் என்ற தொழில்நுட்ப முறையில் இப்பட ஷூட்டிங் நடக்கிறது.
இந்த தொழில்நுட்பத்துக்கு நடிகர், நடிகைகளின் தோல்நிறம் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. இந்த சூழலில் தீபிகாவுக்கு கருப்பு மேக்கப் போட வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. இப்படத்தின் விளம்பர போட்டோக்கள் எடுப்பதற்காக தீபிகா சமீபத்தில் சென்னை வந்தார். ஆனால் அதுபற்றி தவறான செய்தி பரப்பி இருக்கிறார்கள். இதனால் ரசிகர்கள் குழப்பம் அடைய வேண்டியதில்லை. மார்ச் மாதம் மத்தியில் இங்கிலாந்தில் உள்ள பைன்வுட் ஸ்டுடியோவில் ஷூட்டிங் தொடங்குகிறது.

Post a Comment