மகளுடன் கோவா புறப்பட்ட ஐஸ்வர்யா, அபிஷேக் பச்சன்

|


நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் இன்னும் பெயர் வைக்காத மகளுடன் கோவாவுக்கு சென்றுள்ளார்.

ஐஸ்வர்யா ராய் கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தையின் கண்கள் தாயைப் போன்று உள்ளது என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. ஆனால் இந்நாள் வரை குழந்தையைக் கண்ணில் காட்டாமல் வைத்துள்ளனர். பிரசவத்திற்குப் பிறகு ஐஸும் அவ்வளவாக வெளியே வருவதில்லை. அவ்வப்போது அபிஷேக் மட்டும் தனது மகளைப் பற்றி டுவிட்டரில் செய்தி வெளியிடுவார். அண்மையில் கூட தனது மகள் வேகமாக வளர்வதாகத் தெரிவித்திருந்தார்.

அமிதாப் பச்சனை பாலிவுட்டில் பிக் பி என்று அழைக்கின்றனர். ஐஸ் மகளுக்கு பெயர் வைக்காததால் பேட்டி பி என்று ஊடகங்கள் அழைக்கின்றன. இந்நிலையில் பேட்டி பி முதன்முதலாக தனது, தாயுடன் வெளியுலகைப் பார்க்கிறார். அவர்கள் 3 பேரும் தற்போது கோவாவில் உள்ளனர்.

நீங்கள் கோவாவில் இருக்கிறீர்களா? யார் கண்டார் இதுவரை யார் கண்ணிலும் படாத ஐஸ் மகள் உங்கள் கண்ணில் படலாம்.!
 

Post a Comment