பட வாய்ப்பு இல்லாததால் சமையலில் அதிக ஆர்வம் காட்டி வருவதாக சதா கூறினார். அவர் மேலும் கூறியதாவது: தெலுங்கில் சிவாஜியுடன் திரில்லர் கதையில் நடித்துவருகிறேன். இதற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இது ஹீரோயினை மையப்படுத்திய கதை. இதையடுத்து வேறொரு படத்தில் நடிக்கவும் கமிட் ஆகியிருக்கிறேன். தமிழ், கன்னடத்தில் அதிக வாய்ப்புகள் இல்லை. நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறேன். நேரம் அதிகமாக கிடைப்பதால் குடும்பத்துடன் பொழுதை கழிக்கிறேன். தினமும் வீட்டில் எனது சமையல்தான். ஒவ்வொரு நாளும் சமையலில் புதுமையான டிஷ்களை செய்து பார்க்கிறேன். இதற்காக, சமையல் தொடர்பான சேனல்களை பார்க்கிறேன். அதில் சொல்லப்படும் விஷயங்களை வீட்டில் செய்து பார்க்கிறேன். நல்லவேளையாக, செய்யும் டிஷ்கள் சுவையாக இருக்கிறது. இதுவும் புதுமையான அனுபவம்தான். நான் செய்யும் சன்னா பட்டூராவுக்கு எனது குடும்பமே அடிமையாகிக்கிடக்கிறது இப்போது. 'சமையலில் இறங்கிவிட்டீர்கள். அடுத்து திருமணம்தானா?' என்று கேட்கிறார்கள். இப்போது திருமணம் செய்யும் எண்ணமில்லை. இவ்வாறு சதா கூறினார்.
Post a Comment