திருட்டு டிவிடி விற்பனை : சில்க் படம் முதலிடம்

|

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
இந்தியில் தயாரான சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு படம், திருட்டு டிவிடி விற்பனையில் முதலிடம் பிடித்துள்ளது என்றார் தயாரிப்பாளர் ஏக்தா கபூர். தமிழ் கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து இந்தி யில் தயாரான படம் 'தி டர்ட்டி பிக்சர்'. இதில் சில்க் வேடத்தில் வித்யா பாலன் நடித்தார். ஏற்கனவே சில படங்களில் இவர் நடித்திருந்தாலும் முன்னணி இடத்தை பிடிக்கவில்லை. இப்படத்துக்கு பிறகு பாலிவுட்டில் தனக்கென ஒரு இடம் பிடித்தார். படம் வெளியான 2 மாதத்தில் இதன் ஒரிஜினல் டிவிடி மும்பையில் வெளியிடப்பட்டது. இது பற்றி பட தயாரிப்பாளர் ஏக்தா கபூர் கூறும்போது, ''இந்திய சினிமாவிலேயே அதிகபட்சம் திருட்டு டிவிடியில் பார்க்கப்பட்ட படம் 'டர்ட்டி பிக்சர்'தான். இவ்வளவு விரைவாக படத்தின் ஒரிஜினல் டிவிடி வெளியிட்டது பற்றி கேட்கிறார்கள். அப்படி செய்யாவிட்டால் இதன் திருட்டு டிவிடி விற்பனை, பட ரிலீஸில் கிடைத்த வசூலையே தாண்டிவிடும். எனவேதான் உடனடியாக டிவிடி வெளியிடப்படுகிறது'' என்றார். இதுபற்றி வித்யாபாலன் கூறும்போது, ''நல்ல படங்களை கொடுக்கும் எண்ணத்துடன்தான் நடிக்கிறேன். நிறைய படங்கள் ஓடவில்லை. எதுவும் நம் கையில் இல்லை என்பதை 'தி டர்ட்டி பிக்சர்' வெற்றி எடுத்துக்காட்டி இருக்கிறது. இப்படம் 2 மாதத்தில் ரீ ரிலீஸ் செய்தபோது மறுபடியும் ஒரு வசூல் சாதனை நிகழ்த்தியது. டிவிடியும் சாதனை புரியும். சில்க் வேடத்தில் நடித்ததற்காக எனக்கு அதிகபட்சமாக விருதுகள் கிடைத்தது" என்றார்.


 

Post a Comment