தமிழ் படத்தில் நடிக்கும் வெளிநாட்டு நடிகை நம்மூர் கண்மாய்கரையில் தலைக்கு கையை வைத்து தூங்கி ஓய்வெடுத்தார். ஜெர்மன் நாட்டை சேர்ந்த எலினா அசன், செல்வின் ஜோடி நடிக்கும் படம் 'ஒண்டிப்புலி'. இப்பட இயக்குனர் ராஜகுரு கூறியதாவது: தண்ணீரின் தேவை, அணைகளின் அவசியம், தடுப்பணைகள் கட்ட வேண்டியதின் அவசரம் போன்றவற்றை மையமாக வைத்து இப்பட கதை உருவாகி உள்ளது. மழைநீர் கடலில் வீணாகிறது. பயிர் செய்யும் காலத்தில் அணைகள் திறக்கப்படாமல் அறுவடை காலத்தில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த தவறுகள் இப்போதும் நடக்கிறது. முல்லை பெரியாறு அணையை பென்னி குக் என்ற ஒற்றை மனிதர் தலைமை தாங்கி கட்டி முடித்தார். இந்த வரலாறும் இப்படத்தில் இணைக்கப்பட்டிருக்கிறது. செல்வின் ஹீரோ. எலினா அசன் என்ற ஜெர்மன் நாட்டு இளம்பெண் ஹீரோயின். இவர் டெல்லியில் இந்தோ-ஜெர்மன் தூதரக அலுவலகத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். நடிப்பதற்காக தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டார். நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தேனி, பெரியகுளம், நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் ஷூட்டிங் நடந்தது. தும்பிபுரம் என்ற இடத்தில் கண்மாய் அருகே ஷூட்டிங் நடந்தது. ஓய்வு நேரத்தில் கண்மாய் கரை ஓரத்திலேயே எலினா அசன் தூங்கி ஓய்வெடுத்தார். ஏசி கேரவேன் தந்தால்தான் ஷூட்டிங் வருவேன் என்று பல ஹீரோயின்கள் கண்டிஷன்போடும் இந்நாளில் கண்மாய் கரையோரம் ஒரு ஹீரோயின் தூங்கியதை என்னால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. அவரது எளிமை வியக்க வைத்தது. ஜேம்ஸ்வசந்தன் இசை. வைரமுத்து பாடல்கள். இப்பட பாடல் வெளியீட்டு விழாவுக்கு பென்னி குக்கின் கொள்ளுபேரன் சாம் சான் குக்கை அழைத்து வர உள்ளோம். இதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது.
Post a Comment