'தடையறத் தாக்க' படத்தில் இடது கை பழக்கமுள்ளவராக அருண் விஜய் நடிக்கிறார். பெதர் டச் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படம், 'தடையறத் தாக்க'. அருண்விஜய், மம்தா ஜோடி. தமன் இசை அமைக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மகிழ் திருமேனி இயக்குகிறார். படம் பற்றி அருண்விஜய் கூறியதாவது: இது ஆக்ஷன், திரில்லர் படம். பெரும்பாலான காட்சிகளை நள்ளிரவு நேரத்தில் சென்னையில் படமாக்கியுள்ளோம். படத்தின் திரைக்கதை வித்தியாசமாக இருக்கும். இதில், புதுமையாக இடது கை பழக்கமுள்ளவனாக நடித்துள்ளேன். இதற்காக மூன்று மாதம் தினமும் பயிற்சி செய்தேன். ஒரு பழக்கத்திலிருந்து திடீரென்று மாறுவது எவ்வளவு கஷ்டம் என்பது புரிந்தது. மற்றக் காட்சிகளில் நடித்தாலும் சண்டைக்காட்சியில் இடது கை பழக்கமுள்ளவனாக நடிக்க சிரமப்பட்டேன். படத்துக்காக அப்படி பழகி பழகி, இப்போது நிஜமாகவே இடது கை பழக்கம் வந்துவிட்டது. படம் முடிந்துவிட்டது. ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் பாக்கி இருக்கிறது. பெப்சி பிரச்னை முடிந்ததும் ஷூட்டிங் தொடங்கும். ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய முயன்று வருகிறோம்.
Post a Comment