பழம்பெரும் இசை அமைப்பாளர் பி.ஏ.சிதம்பரநாதன். தமிழ் மற்றும் மலையாள படங்களுக்கு இசை அமைத்தவர். இவரது மகன் ராஜாமணி, தமிழில் 'வானமே எல்லை', 'வாஞ்சிநாதன்', 'எல்லாம் அவன் செயல்' படங்களுக்கு இசை அமைத்தார். மலையாளத்தில் 700 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார். இப்போது இவரது மகன் அச்சு, 'மாலைப்பொழுதின் மயக்கத்திலே' என்ற படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: தமிழுக்குப் புதிது என்றாலும், 'பொல்லாதவன்', 'என்னை தெரியுமா' தெலுங்கு ரீமேக்குக்கு இசை அமைத்தேன். மலையாளத்தில் 'குருஷேத்திரா' படத்துக்கு இசை அமைத்தேன். இதுவரை 200 படங்களுக்கு மேல் பின்னணி இசை அமைத்துள்ளேன். முதல் தமிழ் படம், 'மாலைப்பொழுதின் மயக்கத்திலே'. தொடர்ந்து சிறந்த படங்களுக்கு இசை அமைத்து புகழ் பெற ஆசை. பின்னணி இசையில் இளையராஜா போன்று சாதனை படைக்க ஆசை.
Post a Comment