புதுமுகங்கள் சந்துரு, தென்னா மற்றும் கே.ஆர்.விஜயா, பொன்னம்பலம் உட்பட பலர் நடிக்கும் படம், 'விருதுநகர் சந்திப்பு'. எழுதி, தயாரித்து, இயக்கும் வி.எஸ்.டி.ரெங்கராஜன் கூறியதாவது: கல்லூரியில் படிக்கும் ஹீரோ, ஹீரோயின் காதலிக்கின்றனர். திருமணம் செய்துகொள்ள முடிவு செய்யும்போது, ஹீரோயின் தந்தைதான், தன் பெற்றோரை கொன்றவர் என்பது ஹீரோவுக்கு தெரிகிறது. அடுத்து என்ன நடக்கிறது என்பது கதை. விருதுநகரில் நடந்த கோயில் திருவிழாவில், கேமராவை மறைத்து வைத்து, கே.ஆர்.விஜயா தீச்சட்டி சுமந்து வரும் காட்சியைப் படமாக்கினோம். அப்போது பக்திப் பரவசத்தில் ஆழ்ந்த பல பக்தர்கள், ஷூட்டிங் என்று தெரியாமல் கே.ஆர்.விஜயாவின் காலில் விழுந்து வணங்கினர். ஷூட்டிங் முடிந்து விட்டது. படத்தைப் பார்த்த சென்சார் குழு, 'யு' சான்றிதழ் வழங்கியது. இம்மாதம் படம் ரிலீசாகிறது.
Post a Comment