பாத்ரூமில் வழுக்கி விழுந்து பாடகி ஜானகி சீரியஸ்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி, பாத்ரூமில் வழுக்கி விழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பழம்பெரும் பின்னணி பாடகி எஸ்.ஜானகி. இவர் சமீபத்தில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க திருப்பதி சென்றார். அறை ஒன்றில் தங்கி இருந்த அவர், பாத்ரூமில் வழுக்கி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்தார். உடனடியாக திருப்பதியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஆந்திராவில் உள்ள குண்டூரில் 1938ம் ஆண்டு பிறந்த ஜானகி, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்கள் பாடி இருக்கிறார். 4 முறை தேசிய விருதும், 31 மாநில அரசு விருதுகளும் பெற்றவர். இதுகுறித்து ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா நிருபர்களிடம் கூறுகையில், "மருத்துவமனை கண்காணிப்பாளர் சீனிவாச ராவ் தலைமையில் மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர்.

தலையில் காயம் ஏற்பட்டதால் தையல் போடப்பட்டுள்ளது. கீழே விழுந்ததால் மூளை சேதம் ஏற்பட்டதா என கண்டறிய எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்தனர். கீழே விழுந்ததால் தற்போது முதுகுவலியால் அவதிப்பட்டு வருகிறார். அவரது உடல் நலம் குறித்து யாரும் பயப்பட வேண்டாம்" என்றார்.


 

Post a Comment