எந்த தொலைக்காட்சித் தொடரிலும் நடிக்கவில்லை என்று அசின் கூறினார். இந்திப் படங்களில் நடித்துவரும் அசின், டி.வி.சீரியல்களில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாயின. இதுபற்றி அசின் கூறியதாவது: முழுக்க முழுக்க சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். சின்னத்திரையில் நடிக்கும் எண்ணமில்லை. ஒரு டி.வி. நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்துகொண்டேன். அதை வைத்து தவறாகச் செய்தி பரப்பி இருக்கலாம். 'இந்தியில் ஆமிர்கான், சல்மான்கானுடன் நடித்துவிட்டீர்கள், மூன்றாவது கான் நடிகரான ஷாரூக்குடன் எப்போது நடிக்க இருக்கிறீர்கள்' என்று கேட்கிறார்கள். நல்ல கதை அமைந்தால் நடிக்கத் தயாராகவே இருக்கிறேன். சிறந்த நடிகர்களில் அவரும் ஒருவர். இந்தி சினிமாவில் தனித்தனி குழுவாக ஹீரோ, ஹீரோயின்கள் இருக்கிறார்களே என்று கேட்கிறார்கள். நான் எந்த கேம்ப்பிலும் இல்லை.
Post a Comment