கர்மா படத்துக்கு ஆன்லைனில் நடிகர்கள் தேர்வு!

|


கொஞ்ச நாளைக்கு முன் தில் இருந்தா இந்தப் படத்தில் நடிக்க வாங்க என கர்மா என்ற படக்குழுவினர் விளம்பரம் செய்திருந்தனர்.

இதற்கு ஏக ரெஸ்பான்ஸாம். இந்த அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே ஏராளமானோர் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருந்தனர். கிட்ட தட்ட 22000த்திற்கும் மேலானோர் விண்ணப்பித்திருந்தனர், அவற்றில் 170 பேர்களை இறுதி செய்துள்ளார்களாம்.

இன்னொன்று, இந்த விளம்பரம் வெளியான 15 நாட்களுக்குள் கர்மா திரைப்படத்தின் பேஸ்புக் பக்கத்தை 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளார்களாம்.

வரும் 11 மற்றும் 12 தேதிகளில் இந்தப் படத்துக்கான நடிகர்களை தேர்வு செய்ய நேர்காணல் நடத்துகிறார்கள்.

இதுகுறித்து அர்விந்த் ராமலிங்கம் கூறுகையில், "இந்த தேடலுக்கான ரெஸ்பரான்ஸ் மிகவும் அருமையாக இருந்தது. இவ்வளவு பேர் நடிக்க ஆர்வம் உள்ளவர்களா என்று என்னை ஆச்சரியமாக இருந்தது. பல பிரபலங்களின் திரை வாரிசுகள் கூட நடிக்க விருப்பம் தெரிவித்து இருந்தனர். அதே சமயம் இவற்றில் ஒருவருக்குதான் வாய்ப்பு கொடுக்க முடியுமே என்று வருத்தமும் அடைந்தேன்.

அதனால் நாங்கள் முடிவு செய்து வைத்து 170 நபர்களைக் கொண்டு புதிதாக படத்தில் ஒரு ஆல்பம் பாடல் சேர்க்க முடிவு செய்துள்ளோம். அதுமட்டுமில்லாமல் எங்கள் திரைப்படத்தில் ஸ்டைல் பார்ட்னராக அங்கம் வகிக்கும் ஒரு நிறுவனம், 10 நபர்களுக்கு மாடலிங் வாய்ப்பும் அளிக்க இருக்கிறது. நம்பிக்கையோடு விண்ணப்பிதிருந்தவர்களுக்கு எங்களால் ஆன சிறு உதவி இது," என்றார்.
 

Post a Comment