இயக்குனர் ஆகப்போவதாக கூறி இருக்கிறார் சித்தார்த். 'பாய்ஸ்', 'நூற்றெண்பது' உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சித்தார்த். இவர் கூறியதாவது: அமலா பாலுடன் இணைந்து நான் நடித்துள்ள 'காதலில் சொதப்புவது எப்படி?' என்ற பெயரில் தமிழிலும், லவ் ஃபெயிலியர் என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியாகி உள்ளது. இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பை கண்டு த்ரில்லாக உணர்கிறேன். 'பொம்மரில்லு' என்ற படம் தெலுங்கில் வெளியானபோது இதே அனுபவத்தை உணர்ந்தேன். 'கா.சொ.எப்படி' படம் மூலம் நான் தயாரிப்பாளர் ஆகி இருக்கிறேன். வியாபாரத்தில் வெற்றிக்கான புதுவித பாணி படமாக இப்படம் இருக்கிறது. இயக்குனர் இக்கதையை சொல்லும்போது இதுவரை கேட்காத பாணியில் அமைந்திருந்ததை உணர முடிந்தது. காதலில் சொதப்பாதவர்கள் இருக்க முடியாது. அப்படி சொதப்பும் பட்சத்தில் அந்த காதல் என்னவாகிறது என்பதுதான் கதை. இது எனது 10 வருட சினிமாவின் அனுபவத்தில் வந்தது. காதல் கதையை மாறுபட்ட வடிவத்தில் தரவேண்டும் என்பதற்காக பல பாணிகளை சிந்தித்தோம். அதில் இந்த திட்டம் கைகொடுத்திருக்கிறது. இந்தியிலும் இப்படத்தை ரீமேக்க செய்ய திட்டமிட்டுள்ளேன். 'நீங்கள் இயக்குனர் ஆவீர்களா?' என்கிறார்கள். இப்போது வெற்றியின் சந்தோஷத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். இயக்குனர் ஆவேன். ஆனால் அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. இவ்வாறு சித்தார்த் கூறினார்.
Post a Comment