நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாடகத்தில் நடிக்கப் போகிறேன் என்று பத்மப்பிரியா கூறினார். இதுபற்றி அவர் கூறியதாவது; நாடகத்துறையிலிருந்துதான் சினிமாவுக்கு வந்தேன். இங்கு வந்த பிறகு நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போதுதான் ஒரே எண்ணம் கொண்ட, மலையாள நடிகை ஆன் ஆகஸ்டின், இயக்குனர் வி.கே.பிரகாஷ், எழுத்தாளர் ஜெயப்பிரகாஷ் குலூருடன் நானும் பேசிக்கொண்டிருந்தபோது நாடக எண்ணம் மீண்டும் துளிர்த்தது. சிறந்த நாடகங்களை தயாரித்து அதிகமான ரசிகர்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தோம். அதன்படி, ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் செக்காவ் மற்றும் ஜெயப்பிரகாஷ் குலூர் படைப்புகளை நாடகமாக்கியுள்ளோம். நாடகத்துக்கு வந்துவிட்டதால் சினிமா அவ்வளவுதானா என்று கேட்காதீர்கள். தமிழில் 'தங்கமீன்கள்' படத்தில் நடித்துள்ளேன். மலையாளத்தில் மூன்று படங்களில் நடித்துவருகிறேன். நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற பேராசை கொண்டவள் நான். அதனால் சிறந்த கதைகளைத் தேடித் தேடி நடிக்கிறேன். இவ்வாறு பத்மப்பிரியா கூறினார்.
Post a Comment