கிசு கிசு - இயக்கத்துக்கு எதிர்ப்பு ஹீரோக்கள் ஜகா

|

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

லேடீஸ் அழகை ரசிக்கறதுல எனக்கு தனி ஆர்வம்னு வர்மா இயக்கம் வெளிப்படையா சொல்றாராம்... சொல்றாராம்...  தன் படங்கள்ல ஹீரோயினுங்க அழகை வித்தியாசமான கோணத்துல காட்டுறதுக்கு முக்கியத்துவம் தர்றாராம்... இவரோட வெளிப்படையான பேச்சு பிரச்னையை உண்டு பண்ணிடுச்சாம். சில பெண்கள் அமைப்பு வர்மா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிச்சிருக்காம். ஆனா நெருக்கமான ஹீரோயின்கள்  அவர் கருத்து சொன்னதுல தப்பில்லைனு  ஆதரவு கரம் நீட்றாங்களாம்... நீட்றாங்களாம்...

சமீர ஹீரோயின் பேரை கேட்டால் ஹீரோக்கள் ஜகா வாங்கறாங்களாம்... வாங்கறாங்களாம்... ஹீரோக்கள்கிட்ட அவர் மோதல் போக்கு எதையும் கடைபிடிக்கலையாம். ஆனா ஹீரோக்கள போல தனக்கும் ஆக்ஷன் சீன் வையுங்கன்னு இயக்கத்துக்கிட்ட சீக்ரட்டா சொல்றாராம். சீக்ரெட்டா இவர் சொல்ற விஷயத்த சில இயக்கங்கள் ஹீரோக்கள்கிட்ட போட்டுகொடுக்கறதால சத்தமில்லாம ஹீரோக்கள் எஸ்ஸாகறாங்களாம்... எஸ்ஸாகறாங் களாம்...

ஓல்டு ஈஸ்வரி பாடகிக்கு புதுசா லக் அடிச்சிருக்காம்... அடிச்சிருக்காம்... உசத்தியான படத்துல அவர் பாடின பாட்டுக்கு வரவேற்பு இருந்ததால மத்த இயக்கங்களோட பார்வையும் அவர் மேல விழுந்திருக்காம். சத்தமே இல்லாம அமுங்கிகிடந்த பாடகிக்கு திடீர்னு சான்ஸ் கெடச்சதாலே கட்ட குரல்ல பாட்ற பாடகிங்க பயத்துல இருக்காங்களாம்... இருக்காங்களாம்...


 

Post a Comment