அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படம் 'ஆதிபகவான்'. நீது சந்திரா ஜோடி. பாங்காங்கில் படத்தின் பெரும்பகுதி படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்குப் பிறகு அறிமுக இயக்குனரின் இயக்கத்தில் ஜெயம் ரவி 'பூலோகம்' என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார். ஆக்ஷன் த்ரில்லரான இதன் படப்பிடிப்பு திட்டமிட்டபடி எப்போதோ தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் ஆதி பகவானுக்காக ஜெயம் ரவி தாடி மீசை வளர்த்திருக்கிறார். ஜெயம் ரவிக்கு ஜோடியாக அமலா பால் ஒபந்தம் ஆகியிருந்தார். ஆனால் திடீரென இப்போது படத்திலிருந்து விலகிக் கொண்டார் அமலா. அவரிடம் காரணம் கேட்டதற்கு, தனது கால்ஷீட் இல்லாததால் இந்த முடிவை எடுத்ததாகக் கூறினார்.
Post a Comment