ஏகே என்டர்டெயின்மென்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் படம், 'ஏஸ் ராஜா ராணி ஜாக்கி மற்றும் ஜோக்கர்'. தமிழ், தெலுங்கில் தயாராகும் இதில் ஷாம், அல்லரி நரேஷ், வைபவ், ராஜூ சுந்தரம், சினேகா உல்லால், நீலம் உட்பட பலர் நடிக்கிறார்கள். அனில் சங்கரா தயாரித்து இயக்குகிறார். சர்வேஸ் முராரி ஒளிப்பதிவு. பப்பிலஹரி மகன் பப்பாலஹரி இசையமைக்கிறார். இந்தப் படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. கவர்னர் ரோசய்யா துவக்கி வைத்தார். நடிகர்கள் தியாகராஜன், சிம்பு, ஸ்ரீகாந்த், பிரசாந்த், மகதி, இயக்குனர் வெங்கட்பிரபு, தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி உட்பட பலர் கலந்துகொண்டனர். படம் பற்றி அனில் சங்கரா கூறும்போது, ''இது, 3டி படம். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் உருவாக்கப்படுகிறது. முதல்கட்ட ஷூட்டிங் சென்னை மற்றும் பாங்காக்கில் நடக்கிறது'' என்றார்.
Post a Comment