ஹேமச்சந்திரன், மேக்னா ராஜ், நாசர், சண்முகராஜன் உட்பட பலர் நடிக்கும் படம், 'நந்தா நந்திதா'. சூப்பர் டீம் சினிமாஸ் சார்பில் எம்.கோவிந்தராஜ், எம்.நாகராஜ், ஜி.பூபால் தயாரிக்கின்றனர். எழுதி இயக்கும் ராம்சிவா நிருபர்களிடம் கூறியதாவது: கன்னடத்தில் ரிலீசான 'நந்தா நந்திதா' படத்தின் தமிழ் ரீமேக் உரிமை வாங்கி, அதே பெயரில் தெலுங்கிலும், தமிழிலும் படத்தை உருவாக்கினோம். கடந்த வாரம் தெலுங்கில் ரிலீசாகி விட்டது. அதில் ஹேமச்சந்திரன், மேக்னா அண்ணன், தங்கையாக நடித்துள்ளனர். மேக்னாவுக்கு டி.சூர்யா ஜோடி. ஆனால், தமிழில் ஹேமச்சந்திரன், மேக்னா இருவரும் ஜோடி. மேக்னா அண்ணனாக டி.சூர்யா நடிக்கிறார். இது புதுமையான விஷயம். ஹேமச்சந்திரன், குடிகார தந்தையால் அம்மாவை இழக்கிறார். அவரது வாழ்க்கையில் மேக்னாராஜ் குறுக்கிடுகிறார். அவரைக் காதலிக்கும் ஹேமச்சந்திரன், பணத்துக்காக, நாசர் வலையில் சிக்குகிறார். காதல் நிறைவேற வன்முறைப் பாதையில் செல்லும் ஹேமச்சந்திரன், காதலில் வெற்றிபெற்றாரா இல்லையா என்பது கதை. 23ம் தேதி ரிலீசாகிறது.
Post a Comment