மனிதநேய பண்பாளர்களை அரசு அங்கீகரிக்க வேண்டும்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ரா.பார்த்திபன் மனிதநேய மன்றம் சார்பில் ரத்ததான முகாம் மற்றும் கண் தான முகாம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த லாட்டரி வியாபாரி சுரேஷுக்கு, 'சிறந்த மனிதநேயன் விருது' வழங்கப்பட்டது. நீதிபதி சந்துரு அவருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். இதையடுத்து சுரேஷின் வாரிசுகள் படிக்க, 50 ஆயிரம் ரூபாய் வழங்கிய விவேக், பேசியதாவது:

60 வயதை தாண்டிய அய்யப்பன் என்பவர், வறுமை காரணமாக, சுரேஷ் கடையில் லாட்டரி சீட்டுகள் வாங்கினார். அதற்கான பணம் 250 ரூபாயைக் கொடுக்க முடியவில்லை. சுரேஷிடமே கொடுத்துவிட்டார். மறுநாள் அந்த சீட்டுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு கிடைத்தது. விஷயத்தை அய்யப்பனிடம் சுரேஷ் சொன்னபோது, 'லாட்டரி சீட்டுகளுக்கான பணத்தை உங்களிடம் கொடுக்காத எனக்கு இந்த பரிசு கிடைப்பது நியாயம் இல்லை' என்று மறுத்தார். ஆனால் சுரேஷ் விடாப்பிடியாக, 'இது உங்களுக்கான சீட்டு. இதற்கான தொகை 250 ரூபாய் கொடுங்கள். நியாயமாக ஒரு கோடி ரூபாய் பரிசு உங்களுக்கே சேர வேண்டும்' என்று கொடுத்துவிட்டு சென்றார். ஏழ்மையிலும் இவ்வளவு நேர்மையாகவும், மனிதநேயத்துடனும் நடந்துகொண்ட சுரேசுக்கு, மனிதநேய மன்றம் விருது கொடுத்திருப்பதன் மூலம் பார்த்திபன் உயர்ந்துவிட்டார்.

இதுபோல் மனித நேயத்தில் சிறந்து விளங்குபவர்களை அரசு அங்கீகரித்து, உயர்ந்த விருதை வழங்க வேண்டும். இவ்வாறு விவேக் பேசினார். விழாவில், கே.பாக்யராஜ், பிரசன்னா, ரோகிணி, டாக்டர்கள் முருகப்பன், சுஜாதா உட்பட பலர் கலந்துகொண்டனர்.


 

Post a Comment