அர்ஜுன் படத்தில் மாற்றுத்திறன் சிறுவன்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அர்ஜுன் மகனாக காது கேட்காத, வாய் பேச முடியாத சிறுவன் நடிக்கிறான். இப்படம் குறித்து இயக்குனர் மனோஜ் சதி கூறியதாவது: தமிழ், தெலுங்கு, கன்னடம் என 3 மொழிகளில் அர்ஜுன் நடிக்கும் படம் 'பிரசாத்'. சாதாரண மெக்கானிக்கான தனக்கு ஆண் குழந்தை பிறந்தால் வளர்ந்து ஆளாகி குடும்ப கஷ்டத்தை போக்குவான் என்று எண்ணுகிறார். ஆண் குழந்தை பிறக்கிறது. மாற்று திறனாளியாக பிறக்கும் அக்குழந்தையால் வாய் பேச முடியாது. காது கேட்காது. அதன்பிறகு அர்ஜுன் எடுக்கும் முடிவு கிளைமாக்ஸ். அர்ஜுன் மகனாக சிறுவன் சங்கல்ப் நடிக்கிறார். இந்த சிறுவன் உண்மையிலேயே மாற்று திறனாளி.  காது கேட்காது, வாய்பேச முடியாது. அர்ஜுன் என்றதும் ஆக்ஷன்தான் ஞாபகம் வரும். இந்த படத்தில் துளிகூட சண்டை காட்சி கிடையாது, டூயட்டும் கிடையாது. ஹீரோயின் மாதுரி பட்டாச்சார்யா. இசை இளையராஜா. தயாரிப்பு அசோக் கேணி.


 

Post a Comment