சிட்டி லைட்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் படம், 'ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி'. 23-ம் தேதி ரிலீசாகிறது. படம் பற்றி இயக்குனர் ஷண்முகராஜ் கூறியதாவது: வசனம் இல்லாத படம், இசை இல்லாத பாடல், பாடல்கள் இல்லாத படம் என இதுவரை பல புதுமைகளை செய்துவிட்டனர். நானும் ஏதாவது புதுமை செய்ய வேண்டும் என நினைத்தேன். அதன்படி ஒரு பாடல் முழுக்க ஹீரோ, ஹீரோயின் முகம் தெரியாமல், அவர்களது கை, கால்களை மட்டுமே காட்டி ரசிக்கும் வகையில் படமாக்கியுள்ளேன். இது, புது முயற்சி என்பதில் எனக்கு பெருமை. திருக்குறள் காமத்துப்பாலில் இருந்து 16 குறள்களை தேர்வு செய்து, அவற்றை மையப்படுத்தி யுகபாரதி எழுதிய பாடல், 'பாலோடு தேன்சேர பணிமொழி வாய்சேர'. தாஜ்நூர் இசையில் உருவான இப்பாடலை, காரைக்குடியிலுள்ள பாரம்பரியமான வீட்டில், 6 நாட்கள் படமாக்கினேன். இதற்காக புதுமுகங்கள் வெங்கடேஷ், அக்ஷராவுக்கு முன்கூட்டியே பயிற்சி அளித்தேன். இயல்பாகவும், சிறப்பாகவும் நடித்தார்கள். படத்தில் இப்பாடல் காட்சி ஹைலைட்டாக இருக்கும்.
Post a Comment