கேன்ஸ் பட விழாவில் விஸ்வரூபம் திரையிட கமல்ஹாசனுக்கு விழா குழு நிபந்தனை

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கேன்ஸ் பட விழாவில் விஸ்வரூபம் படத்தை திரையிட கமல்ஹாசனுக்கு விழா குழு நிபந்தனை விதித்துள்ளது. எழுதி, இயக்கி, கமல்ஹாசன் நடிக்கும் படம் விஸ்வரூபம். தீவிரவாதம் தொடர்பான பின்னணியில் இப்படக் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் கமல்ஹாசனுடன் ஆண்ட்ரியா, ராகுல் போஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஷங்கர்-எஹசான்-லாய் இசையமைக்கிறார். பட ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளை கேன்ஸ் பட விழா குழுவினருக்கு கமல்ஹாசன் திரையிட்டு காண்பித்தார். இதை பார்த்த குழுவினர், இப்படத்தை பட விழாவில் திரையிடலாம் என அனுமதி வழங்கிவிட¢டது.

ஆனால் மார்ச் 15ம் தேதிக்குள் பட பிரின்ட் எங்களுக்கு வேண்டும் என கமல்ஹாசனுக்கு விழா குழு நிபந்தனை விதித்துள்ளது. இதனால் பட யூனிட் அதிர்ச்சி அடைந்துள்ளது. இது பற்றி கமல்ஹாசன் கூறும்போது, ÔÔவிஸ்வரூபம் படத்தை 9 பேர் அடங்கிய விழா குழு பார்த்தது. கிரிஸ்டியன் ஜெவ்ன் என்பவருடன் தொடர்ந்து பேசி வருகிறேன். அவரும் பட வேலைகள் பற்றி அவ்வப்போது கேட்டு அறிந்துகொள்கிறார். கேன்ஸ் பட விழாவில் விஸ்வரூபம் திரையிடப்பட்டால் அது சந்தோஷமாக இருக்கும் என்றார். விழா குழு அளித்த நிபந்தனைபடி இன்னும் 14 நாட்களே இருப்பதால் அதற்குள் படத்தை முடிக்க கமல் அண்ட் கோ தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நேரடி டப்பிங்குடன் ஷூட்டிங் நடப்பதாக கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவித்தன.


 

Post a Comment