ஏர்போர்ட் அதிகாரிகளுடன் நடிகை சோனா வாக்குவாதம்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ரெடிமேட் துணிகளுக்கு சுங்கத் தீர்வை செலுத்துவது தொடர்பாக, விமான நிலைய அதிகாரிகளுடன் நடிகை சோனா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தாய் ஏர்லைன்ஸ் விமானம் பாங்காக்கில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள், தீவிர சோதனை நடத்தினர். அந்த விமானத்தில் பிரபல நடிகை சோனாவும் வந்தார். அவரது உடமைகளை சுங்க அதிகாரிகள் சோதித்தபோது அதில் ஏராளமான ரெடிமேட் துணிகள் இருந்தன. அதிகாரிகள் அதற்கு சுங்கத் தீர்வை செலுத்த வேண்டும் என்றனர். ஆனால் நடிகை சோனா, ''நான் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு உட்பட்டுத்தான் பொருட்கள் கொண்டு வந்துள்ளேன். நீங்கள் எப்படி எனக்கு வரி போடுவீர்கள்'' என்று வாக்குவாதம் செய்தார்.

ஆனால் சுங்க அதிகாரிகள், ''நீங்கள் கொண்டு வந்துள்ள ஆடைகளுக்கு ரூ.5,000 முதல் ரூ.25,000 வரை வரி செலுத்த வேண்டும்'' என்றனர். இதனால் சோனாவுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் நீண்ட நேரம் கடும் வாக்குவாதம் நடந்தது. பின்னர் நடிகை சோனா, ''என்னிடம் சுங்கத் தீர்வை செலுத்துவதற்கான பணம் இல்லை. எனது உடைமைகளை இங்கேயே விட்டுச் செல்கிறேன். நாளை என் உதவியாளர் யாரையாவது அனுப்பி சுங்கத் தீர்வை செலுத்திவிட்டு பெற்றுக் கொள்கிறேன்'' என்று கோபமாக கூறிவிட்டு சென்றார்.


 

Post a Comment