இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் பிரபுதேவா நடனம் ஆடுகிறார். ஒவ்வொரு வருடமும் நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்த வருடம், ஏப்ரல் 4-ம் தேதி தொடங்குகிறது. இதற்கு முன்னதாக ஏப்ரல் 3-ம் தேதி சென்னையில் இதன் தொடக்க விழா நடக்க இருக்கிறது. இதில் ரசிகர்கள் முன்னிலையில் பிரபுதேவா நடனம் ஆடுகிறார். மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தின் முன் பிரபுதேவா நடனம் ஆடுவது இதுதான் முதல் முறை. சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இல்லாமல், ஒய்எம்சிஏ கிரவுண்டில் இந்த தொடக்க விழா நடக்கும் என்று கூறப்படுகிறது. இதில் தமிழ், ஹிந்தி பாடல்களுக்கு பிரபுதேவா நடனம் ஆடுகிறார். அவருடன் இந்தி நடிகர் சல்மான் கான், நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோரும் டான்ஸ் ஆடுகிறார்கள். இந்த நிகழ்ச்சியை அமிதாப் பச்சன் தொகுத்து வழங்குகிறார். ஏப்ரல் 3-ம் தேதி பிரபுதேவாவுக்கு பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment