தெலுங்கு ரீமேக் படம் கிரிக்கெட் வீரர் கங்குலி ஹீரோ

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
வங்காள மொழியில் ரீமேக் ஆகும் தெலுங்கு படத்தை கிரிக்கெட் வீரர் கங்குலி தயாரித்து நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. கிரிக்கெட் பின்னணியில் அமைந்த படம் 'கோல்கொண்டா ஹை ஸ்கூல்'. இப்படம் வங்க மொழியில் ரீமேக் ஆகிறது. இதில் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி ஹீரோவாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி 'கோல்கொண்டா ஹை ஸ்கூல்' பட தயாரிப்பாளர் ராம் மோகன் பருவு கூறும்போது,''கொல்கத்தாவில் இருந்து ஒரு பட தயாரிப்பு நிறுவனத்தினர் என்னை அணுகினர். அப்போது கோல்கொண்டா... படத்தை வங்க மொழியில் ரீமேக் செய்ய விரும்புவதாகவும் அதற்கான உரிமை வேண்டும் என்றும் கேட்டனர். அவர்களிடம் இதை தயாரிக்கப்போவது யார், நடிக்கப்போவது யார் என்று கேட்டேன். அவர்கள்தான் கிரிக்கெட் பின்னணியிலான கதை என்பதால் கிரிக்கெட் வீரர் சவ்ரவ் கங்குலி தயாரித்து கிரிக்கெட் கோச்சாக நடிக்க உள்ளார் என்றனர். இதையடுத்து வங்க மொழி உரிமையை விற்றேன். மற்ற எந்த மொழியிலும் ரீமேக் செய்ய உரிமை தரவில்லை. இப்படத்தை ஆங்கிலத்தில் டப்பிங் செய்ய முடிவு செய்துள்ளோம்'' என்றார். இதுபற்றி கங்குலி தனது நெருங்கிய நண்பர் ஒருவரிடம் கூறும்போது,''கோல்கொண்டா... படத்தை நான் பார்க்கவில்லை. இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று என்னிடம் யாரும் கேட்கவில்லை'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.


 

Post a Comment