பாம்புக்கு கிஸ் : மல்லிகா-இம்ரான் ஹாஷ்மி மீண்டும் மோதல்!

|

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
மல்லிகா ஷெராவத்துக்கும் பாலிவுட் ஹீரோ இம்ரான் ஹாஷ்மிக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பேட்டி அளித்த இம்ரான் ஹாஷ்மி, 'மர்டர்Õ இந்தி படத்தில் தன்னுடன் நடித்த மல்லிகா ஷெராவத்துக்கு முத்த காட்சியில் நடிக்க தெரியவில்லை என்று விமர்சித்திருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இம்ரானின் பேட்டியை அறிந்து கோபம் அடைந்த மல்லிகா, 'Ôஇம்ரானுடன் முத்தக்காட்சியில் நடித்ததை காட்டிலும் Ôஹிஸ்ஸ்Õ படத்தில் பாம்புக்கு முத்தம் கொடுத்து நடித்ததுதான¢ நன்றாக இருந்தது. இம்ரானைவிட முத்தக்காட்சியில் நடிப்பதற்கு பாம்பு தான் சிறந்ததுÕÕ என்றார். இந்த மோதலுக்கு பிறகு அமைதியாக இருந்த இருவரும் தற்போது மீண்டும் மோதலுக்கு தயாராகி இருக்கிறார்கள். பாம்புக்கு முத்தமிட்டதை புகழ்ந்திருந்த மல்லிகாவுக்கு தற்போது பதிலடி கொடுத்திருக்கார் இம்ரான். 'பாம்புக்கு முத்தம் கொடுத்தவர், அடுத்து பாம்பாட்டிக்கு முத்தம் கொடுத்து நடிக்கட் டும். இது இன்னும் நன்றாக இருக்கும்Õ என்று மீண்டும் மல்லிகாவை வம்புக்கு இழுத்திருக்கிறார் இம்ரான். இருவருக்கும் படங்கள் இல்லாததால் பப்ளிசிட்டிக்காக இப்படி யோசித்து யோசித்து தாக்கிக் கொள்கிறார்கள் என பாலிவுட் வட்டாரம் கூறுகிறது.


 

Post a Comment