ஜெயம் ரவி நடிக்கும், 'பூலோகம்' படத்துக்கு ஒன்றரை கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறது. ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில் வி.ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம், 'பூலோகம்'. ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கிறார். எஸ்.பி.ஜனநாதனின் அசோசியேட் கல்யாண்குமார் இயக்குகிறார். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். பாக்ஸர் பற்றிய கதையான இதன் ஷூட்டிங், மே மாதம் 20-ம் தேதிக்கு மேல் சென்னையில் தொடங்குகிறது. இதற்காக, மோகன் ஸ்டூடியோவில் பிரமாண்ட செட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் அமையும் இந்த செட், ஜெயம் ரவி வசிக்கும் பகுதியாக படத்தில் காண்பிக்கப்படும். தற்போது 'ஆதிபகவன்' ஷூட்டிங்கில் நடித்துவரும் ஜெயம் ரவி, அந்த படப்பிடிப்பிலிருந்து வந்ததும் இதன் ஷூட்டிங் தொடங்கும். ஹீரோயினாக நடிக்க பல்வேறு தரப்பில் பேசி வருகிறோம். இன்னும் முடிவாகவில்லை' என்று படக்குழு தெரிவித்தது.
Post a Comment