மே 1-ல் கமலின் விஸ்வரூபம் ட்ரைலர் ரிலீஸ்!!

|


Kamal Hassan
சாதனை நடிகர் கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படத்தின் முன்னோட்டக் காட்சி வரும் மே 1-ம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பெரும் பொருட்செலவில் கமல்ஹாஸன் நடித்து இயக்கி வரும் படம் விஸ்வரூபம்.

இந்தப் படம் குறித்த எந்த தகவலும் வெளியாகாத அளவு ரகசியம் காத்து வருகிறார் கமல் ஹாஸன். எந்தத் தகவலையும் வெளியில் சொல்லக்கூடாது என படத்தில் பணியாற்றும் அனைத்து டெக்னீஷியன்களுக்கும் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அட, படத்தின் பிஆர்ஓவே விஸ்வரூபம் என்றதும் உதடுகளை இறுக்க மூடிக் கொள்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

இந்த நிலையில், படத்தின் முதல் பார்வை வரும் மே 1-ம் தேதி வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது.

அன்று உழைப்பாளர் தினம் என்பதால், அன்றே தனது படத்தின் டிரைலரை கமல் வெளியிடப் போகிறாராம்.

விஸ்வரூபம் படத்தின் பெரும்பகுதி ஷூட்டிங் அமெரிக்காவில் நடந்தது. இப்போது படக் குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர். இந்த படத்தில் கமலின் கெட்டப் எப்படி இருக்கும் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. கமல் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளதாக சொல்கிறார்கள்.

முதல் தடவையாக மே 1-ந்தேதி டிரைலர் மூலம் அவரது தோற்றம் தெரிய வர உள்ளது. தியேட்டர்களிலும் இணைய தளங்களிலும் அன்றைய தினம் விஸ்வரூபம் படத்தின் டிரெய்லரை வெளியிடுகின்றனர்.

30 நொடிகள் ஓடும் வகையில் இந்த டிரைலரை தயார் செய்துள்ளனர். படத்தின் முக்கிய சீன்கள் இந்த டிரைலரில் சேர்க்கப்பட்டுள்ளதாம்.
Posted by: Shankar
 

Post a Comment