கிராபிக்ஸ் படத்தில் நடிப்பது சவால்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : பி.வி.பி சினிமா சார்பில் பரம் வி.பொட்லூரி தயாரிக்கும் படம், 'நான் ஈ'. எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்குகிறார். நானி, சமந்தா, சந்தானம் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, கே.கே.செந்தில்குமார். இசை, மரகதமணி. பாடல்கள், மதன் கார்க்கி. இதன் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது.

பாடலை வெளியிட்டு சூர்யா பேசியதாவது:எல்லா ஆக்ஷன் ஹீரோக்களும் ராஜமவுலி இயக்கத்தில் நடித்திருக்கிறார்கள். 'மகதீரா'வின் மேக்கிங்கைப் பார்த்து அசந்து விட்டேன். ஒவ்வொரு படத்துக்கும் ஆய்வு மேற்கொள்வது ராஜமவுலியின் பாணி. அதனால்தான் வித்தியாசமான கதையையும், தொழில்நுட்பங்களையும் அவரது படங்களில் பார்க்க முடிகிறது. 'நான் ஈ', அடுத்த தலைமுறை ரசிகர்களுக்கான படம் என்பதில் சந்தேகம் இல்லை. ஈக்களில் எத்தனை வகை உள்ளன? அவற்றின் குணாதிசயங்கள் என்ன என்பது உட்பட ஏராளமான விஷயங்களை இப்படத்தில் வைத்திருக்கிறார். இதில் ஈ ஹீரோவாக நடித்திருக்கிறது. இதுபோல் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் படத்தில் நடிப்பது பெரிய சவாலாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
கார்த்தி, பார்த்திபன், பாலா, லிங்குசாமி, சமுத்திரக்கனி, ஜெயேந்திரா, யுடிவி தனஞ்செ யன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


 

Post a Comment