பாடகி அனுஷாவின் ஃபேஷன் ஷோவில் சிம்பு, டாப்ஸி

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'மங்காத்தா' படத்தில் பாடியவர், அனுஷா தயாநிதி. இவர், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மருமகள். தற்போது 'நெஃபர்டரி' என்ற அமைப்பை தொடங்கியுள்ளார். இந்நிறுவனம் சார்பில் கிண்டி லீ ராயல் மெரிடியன் ஓட்டலில், வரும் 15-ம் தேதி பேஷன் ஷோ நடத்துகிறார். இதுபற்றி நிருபர்களிடம் அனுஷா தயாநிதி கூறியதாவது: ஃபேஷன் ஷோவுக்காக எகிப்து அரண்மனை மாதிரி பிரமாண்ட அரங்கு அமைக்கப்படுகிறது. அதிநவீன 3 டி தொழில்நுட்ப முறையில், நிகழ்ச்சியை 3டி கண்ணாடி இல்லாமல் பார்த்து ரசிக்கலாம்.  டாப் மாடல்கள் 26 பேர் பங்கேற்கும் பேஷன் ஷோ நிகழ்ச்சியில் பாலிவுட்டைச் சேர்ந்த நர்கீஸ் பஹ்ரி மற்றும் சிம்பு, ஆர்யா, ஜீவா, சித்தார்த், டாப்ஸி, சோனியா அகர்வால் ஆகியோர் பங்கேற்கின்றனர். இறுதியில் எங்கள் அமைப்பு சார்பில், அரவிந்த் பவுண்டேஷன் மூலமாக, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் நல்வாழ்வுக்காக நிதியுதவி வழங்கப்படுகிறது.


 

Post a Comment