விஷால், த்ரிஷா நடிக்கும் படம், 'சமரன்'. இதை 'திராத விளையாட்டுப் பிள்ளை' படத்தின் இயக்குனர் திரு இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். பாலாஜி ரியல் மீடியா தயாரிக்கும் இந்தப் படத்தின் பெயர், 'சமர்' என்று மாற்றப்பட்டுள்ளது. இதுபற்றி இயக்குனர் திரு கூறியதாவது: 'சமரன்' என்பதை விட 'சமர்' ஈசியாக ரீச் ஆகும் என்பதால் தலைப்பை மாற்றியுள்ளோம். படத்தின் அடுத்த ஷெட்யூல், வரும் பத்தாம் தேதிக்கு மேல் திட்டமிடப்பட்டுள்ளது. மீண்டும் தாய்லாந்து செல்கிறோம். அங்கு தொடர்ந்து 24 நாட்கள் ஷூட்டிங் நடக்கிறது. அதோடு படம் முடிந்துவிடும். இதற்கிடையில் ஒரு பாடலை மட்டும் வெளியிடும் திட்டம் இருக்கிறது. இதற்காக யுவன் சங்கர் ராஜாவிடம் பேசிவருகிறோம். அதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும். ஜூலை மாதம் படம் ரிலீஸ் ஆகும். இவ்வாறு திரு கூறினார்.
Post a Comment