திருநெல்வேலி என்றால் அரிவாள்தானா?

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
டி கிரியேஷன்ஸ் சார்பில் இயக்குனர் திருமலை தயாரிக்கும் படம், 'நெல்லை சந்திப்பு'. ரோஹித், பூஷன், மேகா நாயர், தேவிகா உட்பட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, சேவிலோராஜா. இசை, யுகேந்திரன் வாசுதேவன். பாடல்கள், ஆண்டாள் பிரியதர்ஷினி, புகாரி. வசனம், எம்.ஜி.கன்னியப்பன். கே.பி.பி.நவீன் இயக்கியுள்ளார். இதன் பாடல் வெளியீடு சென்னையில் நடந்தது. திருமலை வரவேற்றார். ராமசுப்பு எம்.பி., இயக்குனர் விக்ரமன் பாடலை வெளியிட்டனர். ஷாம், சரண், ஐசரி கணேஷ் பெற்றனர். விழாவில் விக்ரமன் பேசியதாவது:

திருநெல்வேலியை மையமாக வைத்து வரும் படங்களில், அங்குள்ளவர்களை ரவுடிகளாகவும், அரிவாள் தூக்குபவர்களாகவும் காட்டுகின்றனர். திருநெல்வேலியில் பல இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், பாடலாசிரியர்கள், விடுதலைப் போராட்டத்துக்கு வித்திட்டவர்கள், தியாகிகள் தோன்றியிருக்கிறார்கள். இன்றும் இருக்கிறார்கள். ஒரு சார்பாகவே கதை சொல்லக்கூடாது. திருநெல்வேலியில் எத்தனையோ சிறப்புகள் உள்ளன. ஆனால், அல்வாவை மட்டுமே பிரதானமாக சொல்கிறார்கள். உண்மையில், திருநெல்வேலிக்காரர்களாகிய எங்களுக்கு அல்வா செய்ய தெரியாது. பல தலைமுறைக்கு முன் வடமாநில ஆட்கள் வந்து அல்வா கிண்டியிருக்கிறார்கள். அதை வைத்து, நெல்லை என்றால் அல்வா என்று பிரபலமாகி விட்டது. இவ்வாறு அவர் பேசினார். விழாவில் பி.எல்.தேனப் பன், பட்டியல் சேகர், எஸ்.கதிரேசன், ஜி.கிச்சா உட்பட பலர் கலந்துகொண்டனர். கே.பி.பி.நவீன் நன்றி கூறினார்.


 

Post a Comment