விமர்சகர்களுக்காக படம் எடுக்கவில்லை: திலீப்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
திலீப், லட்சுமி ராய், பிஜூ மேனன் நடித்துள்ள மலையாள படம், 'மாயமோகினி'. ஜோஸ் தாமஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் இடைவேளை வரை பெண்ணாக நடித்துள்ளார் திலீப். இந்தப் படம் ஹிட்டாகியுள்ள நிலையில், படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகமாக உள்ளது என்ற புகார் எழுந்துள்ளது. இதுபற்றி திலீப் கூறியதாவது: விமர்சகர்கள் எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்காக படம் எடுக்கப்படுவதில்லை. 'டெல்லி பெல்லி', 'டர்ட்டி பிக்சர்' போன்ற படங்களை பாராட்டியவர்கள்தான் என் படங்களை விமர்சிக்கிறார்கள். அந்தப் படங்களிலும் இரட்டை அர்த்த வசனங்கள் இருந்தன. எனது படங்களில் வல்கராக எந்த காட்சியையும் வசனத்தையும் வைக்க மாட்டேன். படத்தின் வெற்றியையும் தோல்வியையும் ஒரே மாதிரியாகத்தான் எடுத்துக்கொள்கிறேன். ஒரே படம் ஹிட்டானால் உயரத்துக்கு சென்றுவிட்டதாக நினைக்கவில்லை. இங்கு உயரம் என்ற ஒன்று இல்லை. பெண்ணாக நடிப்பதற்கு என் மனைவி உட்பட என்னைச் சுற்றி இருக்கும் நிறைய பெண்களை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொண்டேன். இப்படி நடிக்க கடுமையான டயட்டில் இருந்து எட்டு கிலோ உடல் எடையை குறைத்தேன். ரசிகர்கள் பாராட்டுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த பாராட்டுகள்தான் எனது அடுத்த படங்களை இன்னும் சிறப்பாக கொடுக்க உந்துசக்தியாக இருக்கிறது.
இவ்வாறு திலீப் கூறினார்.


 

Post a Comment