தயாரிப்பாளர் சங்கத்தைக் கைப்பற்ற முயற்சி - எஸ்ஏசி, தாணு, தேனப்பன் மீது போலீசில் புகார்!

|


S Thaanu
சென்னை: தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன், பொருளாளர் தாணு, செயலாளர் தேனப்பன் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் தயாரிப்பாளர் சங்கத்தை கைப்பற்ற முயற்சிப்பதாக்க கூறி, போலீஸ் கமிஷனரிடம் இன்று புகார் கொடுக்கப் போவதாக இப்ராகிம் ராவுத்தர் தலைமையிலான நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.

மேலும் தயாரிப்பாளர் சங்கக் கட்டடத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இப்ராகிம் ராவுத்தர் கூறுகையில், "சட்டப்படிதான் நாங்கள் சந்திரசேகரனையும், தாணுவையும், தேனப்பனையும் நீக்கியுள்ளோம். ஆனால் அவர்கள் இன்னும் தாங்களே சங்கம் என்று கூறி, கட்டடத்தைக் கைப்பற்ற முயற்சித்து வருகின்றனர்.

6 மாத காலத்துக்கு சஸ்பென்ட் செய்யப்பட்ட இவர்களை சங்கக் கட்டடத்துக்குள்ளேயே விடக்கூடாது என்று முடிவு செய்துள்ளோம். அதையும் மீறி சட்டவிரோதமாக கைப்பற்றல் முயற்சியை அவர்கள் மேற்கொள்ளக் கூடும் என்பதால், கமிஷனர் அலுவலகத்தில் இவர்கள் மீது புகார் தர முடிவெடுத்துள்ளோம்.

மேலும் கட்டடத்துக்கு போலீஸ் பாதுகாப்பு தருமாறு காவல்துறையைக் கேட்டுக் கொள்கிறோம்," என்றார்.
 

Post a Comment