'மை டியர் குட்டிச்சாத்தான்' புகழ் மலையாள தயாரிப்பாளர் அப்பச்சன் மரணம்

|


Appachan
பிரபல மலையாள சினிமா தயாரிப்பாளரும், இயக்குனருமான அச்சப்பன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 81.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அப்பச்சன் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தார். அவருடைய உடல்நிலை மோசமடைந்து நேற்று மாலை உயிர் பிரிந்தது.

'நவோதயா அச்சப்பன்' என்று அழைக்கப்படும் அவருடைய இயற்பெயர், மலியம்புரக்கல் சாக்கோ புன்னூஸ். இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் வெளியாகி வசூலில் சாதனை படைத்த முதல் '3 டி' படமான 'மை டியர் குட்டிச்சாத்தான்' படத்தை தயாரித்தவர் அப்பச்சன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜே.சி.டேனியல் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்ற அப்பச்சன், மலையாள திரையுலகில் சினிமாஸ்கோப், 70 எம்.எம். போன்ற புதிய தொழில்நுட்பங்களை புகுத்தியவர். பல புதுமுகங்களையும் துணிச்சலுடன் தனது படங்களில் அறிமுகப்படுத்தியவர்.

மலையாளத்தின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாசிலை அறிமுகப்படுத்தியவர், மஞ்சில் விரிஞ்ச பூக்கள் படம் மூலம் பூர்ணிமா பாக்யராஜை அறிமுகப்படுத்தியவர், மலையாளத்தின் முதல் 70 எம்எம் படத்தை இயக்கியவர் என பல பெருமைகள் அவருக்கு உண்டு.

இந்தியாவின் முதல் தீம் பார்க்கான கிஷ்கிந்தாவின் நிறுவனர் அவரே.

அப்பச்சனுக்கு மனைவியும், இரு மகன்கள் மற்றும் இரு மகள்களும் உள்ளனர்.

இரங்கல்

அப்பச்சன் மறைவுக்கு மலையாள, தமிழ் திரையுலகம் இரங்கல் தெரிவித்துள்ளது. கேரள முதல்வர் உம்மன்சான்டி தனது இரங்கலை தெர்வித்துள்ளார்.
 

Post a Comment