கோச்சடையான் அனுபவம்... சிலிர்க்கும் ஆதி

|


Aadhi and Rajini
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கோச்சடையான் படத்தில் நடித்தது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம் என்று நடிகர் ஆதி கூறினார்.

ரஜினியின் கோச்சடையான் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடந்து வருகிறது.

இப்படத்தில் சரத்குமார், ஆதி, முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். நாயகியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். ஆதி நடித்த காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது.

அந்த அனுபவம் குறித்து ஆதி கூறுகையில், "ரஜினி எனது ஆதர்ச நாயகன். என் இளம் வயதிலிருந்து அவரைப் பார்த்து வருகிறேன். என் அப்பா அவர் நடித்த பெத்தராயுடுவை இயக்கியவர்.

நான் நடித்த ஈரம் படத்தின் இசையை ரஜினி வெளியிட்டு வாழ்த்தியதை மறக்க முடியாது.

அப்படிப்பட்ட என் ஹீரோ, ரஜினி சாருடன் கோச்சடையான் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படம் மூலம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ள சௌந்தர்யாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் எனக்கு ஒரு சவால்.

ரஜினியை படப்பிடிப்பில் சந்தித்தது உற்சாகமூட்டுவதாக அமைந்தது. நான் நடித்து முடித்த கடைசி நாளில் ரஜினியுடன் சிறிது நேரம் பேச சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது அவருடன் போட்டோ எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டேன். அதை அவரிடத்தில் சொல்ல தயங்கினேன். ஆனால் ரஜினி திடீரென என்னை பக்கத்தில் அழைத்து போட்டோ எடுத்துக்கொள்ளலாம் என்றார். என் தோளில் கைபோட்டு படம் எடுத்தார். அது மறக்க முடியாத தருணம்," என்றார்.
 

Post a Comment