விஜயகாந்த் மகனுக்காக பெரும் விலை கொடுத்து வாங்கப்பட்ட தெலுங்குப் படம்!

|


நடிகர் விஜய் உள்ளிட்ட தமிழின் முன்னணி நடிகர்கள் கேட்டும் கூட கொடுக்காமலிருந்த ஒரு படத்தின் ரீமேக் உரிமையை, விஜயகாந்த் மகனுக்காக கொடுத்திருக்கிறார் தெலுங்கு தயாரிப்பாளர்.

அந்தப் படம் என்டிஆர் நடித்த தெலுங்குப் படம் பிருந்தாவனம்.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நாயகனாக அறிமுகமாகிறார். இதனை விஜயகாந்தே அறிவித்திருந்தார்.

இதற்காக பல்வேறு இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்தார் விஜய்காந்த். ஆனால் எதுவும் சரியாக வராததால், ஒரு தெலுங்குப் படத்தை ரீமேக் பண்ணும் பாதுகாப்பான முயற்சியில் இறங்கிவிட்டார்.

அதுதான் ஜூனியர் என்டிஆர் நடித்த பிருந்தாவனம். விஜயகாந்தின் கேப்டன் சினி கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தமிழில் சண்முகபாண்டியனின் அறிமுகப் படமாக ரீமேக் செய்கிறது.

படத்தில் சண்முக பாண்டியனுக்கு இரண்டு நாயகிகளாம். முன்னணி இளம் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

பிருந்தாவனம் படத்தின் ரீமேக் உரிமைக்கு விஜய் உள்ளிட்ட தமிழ் முன்னணி நடிகர்களிடையே கடும் போட்டி நிலவியது. ஆனால் அவர்களுக்கெல்லாம் தராத தயாரிப்பாளர், விஜயகாந்த் மகனுக்கு என்றதும் பேரம் பேசாமல் கொடுத்துவிட்டாராம்!
Posted by: Shankar
 

Post a Comment