பேரன் நடித்த ஓகே ஓகே படத்தை ரசித்துப் பார்த்த கருணாநிதி!

|


Karunanidhi watches OKOK
உதயநிதி ஸ்டாலின் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை நேற்று பிற்பகல் பார்த்து ரசித்தார் திமுக தலைவர் மு கருணாநிதி.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேரனும் மு.க. ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இப்படம் ஏப்ரல் 13-ம் தேதி ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தை பிரத்யேகமாக கருணாநிதிக்கு திரையிட்டுக் காட்டினார்கள். வடபழனியில் உள்ள பிரசாத் லேப் திரையரங்கில் இந்த சிறப்பு காட்சி நடந்தது.

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம் பார்க்க வந்த கருணாநிதியை உதயநிதி ஸ்டாலின், படத்தின் இயக்குனர் ராஜேஷ் ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.

கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளும் படத்தை ரசித்துப் பார்த்தார். படம் முடிந்ததும் அதில் நடித்தவர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் கருணாநிதி பாராட்டினார்.
 

Post a Comment