'புத்தகம்' மூலம் இயக்குநராகும் விஜய் ஆதிராஜ் - ஆர்யா தம்பி சத்யா ஹீரோ!

|


பெரிய திரையில் பெரிய ரேஞ்சுக்கு வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டு, பின்னர் சின்னத் திரை வட்டத்துக்குள்ளேயே நின்றுவிட்டவர் விஜய் ஆதிராஜ்.

ஆனால் தொலைக்காட்சி வட்டாரத்தில் இவர் படு பிஸி. நடிகர், அறிவிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என இவர் பல நிலைகளிலும் பணியாற்றியவர். இப்போது புதிதாக படம் இயக்க உள்ளார். இந்த படத்திற்கு 'புத்தகம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் இயக்குநர் மட்டும் புதுமுகம் அல்ல. நடிகரும்தான். நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யாதான் ஹீரோ. இவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.

காதலும், காமெடியும் கலந்த கதை இது. விஜய் ஆதிராஜ் கதை எழுதி இயக்குகிறார். வசனத்தை குஹன் ஸ்ரீனிவாசன் எழுதுகிறார்.

விஜய் ஆதிராஜின் நண்பர் ஜேம்ஸ் வசந்தன் இப்படத்திற்கு இசையமைக்க, நா. முத்துக்குமார் பாடல்களை எழுதுகிறார்.
Posted by: Shankar
 

Post a Comment