போலீஸ் பாதுகாப்புடன் ரஜினி பட ஷூட்டிங் : கேரள அமைச்சர் ஏற்பாடு

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கேரளாவில் 'கோச்சடையான்' ஷூட்டிங் நடக்கிறது. அதில் பங்கேற்றுள்ள ரஜினிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.

ரஜினி நடிக்கும் படம் 'கோச்சடையான்'. சவுந்தர்யா இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் உள்ள பைன்வுட் ஸ்டுடியோவில் 10 நாட்களுக்கு மேல் நடந்தது. ரஜினிகாந்த் லண்டன் சென்று ஷூட்டிங்கில் பங்கேற்றார். சரத்குமார், தீபிகா படுகோன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்த காட்சிகளும் படமாக்கப்பட்டன. சில நாட்கள் ரஜினியும் மற்ற நட்சத்திரங்களும் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. பின்னர் சென்னை திரும்பினார் ரஜினி. மற்ற நடிகர்கள் நடித்த காட்சிகளை லண்டனில் படமாக்கி வந்தார் சவுந்தர்யா.

இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கேரளாவில் சித்ராஞ்சலி ஸ்டிடுயோ வளாகத்தில் படமாக்க திட்டமிடப்பட்டது. திருவனந்தபுரம், கோவலம் சாலையில் திருவல்லம் என்ற இடத்தில் இந்த ஸ்டுடியோ அமைந்துள்ளது. அங்கு ஷூட்டிங் தொடங்கியது. இந்த ஸ்டுடியோ கேரள மாநில திரைப்பட வளர்ச்சி கழகம் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றும் ஒலிப்பதிவு பொறியாளர் மாநில விருது வென்றிருக்கிறார். அடூர் கோபாலகிருஷ்ணன், ஷாஜி என் கருண் போன்ற பிரபல இயக்குனர்களின் படங்கள் இந்த ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ளதால் பிரத்யேகமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. மாநில அமைச்சரும் மற்றும் நடிகருமான கே.பி.கணேஷ்குமார் ரஜினியின் தீவிர ரசிகர். கோச்சடையான் ஷூட்டிங்கிற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் அவரே முன்னின்று செய்துகொடுத்துள்ளார்.


 

Post a Comment