பிரபுதேவாவை பிரிந்தது ஏன்?

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சென்னை, : பிரபுதேவாவை பிரிந்தது ஏன் என்பதற்கு நயன்தாரா பதிலளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
எனது உறவு மட்டுமல்ல வேறு எந்த உறவு அல்லது திருமணத்தை எடுத்துக்கொண்டாலும் பிரிவு என்பது நடந்திருக்கிறது. வாழ்க்கையில் கருத்துவேறுபாடுகளும் பிரச்னைகளும் வரத்தான் செய்யும். அதை சரியாக கையாள வேண்டும். எல்லை மீறிவிட்டால் கையாள்வது கடினம். மக்கள், சூழ்நிலைகள், செயல்பாடுகள் என எல்லாமே மாறுகின்றன. அதுபோன்றதொரு மாற்றம்தான் என்னை பிரியச் செய்தது. அதற்கு மேலும் செல்ல விரும்பவில்லை. அது என் சொந்த விஷயம்.

எனது விவகாரத்தை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டாம் என நினைக்கிறேன். என்னை பற்றி என்னவெல்லாமோ சொல்லும்போதும் எழுதும்போதும் கண்ணியமாக அமைதிகாத்து வந்தேன். இன்று நிலைமை மாறிவிட்டது. உறவு முறிந்து விட்டது. அதற்கு நூறு காரணங்கள் இருக்கலாம். அல்லது இல்லாமலும் போகலாம். நான் அவருடன் பழகிய போது, நூறு சதவீதம் உண்மையாக இருந்தேன். ஆனால், இதற்கு மதிப்பில்லை எனும்போது, உறவை முறித்துக் கொள்வதை தவிர, வேறு வாய்ப்பு என்னவாக இருக்க முடியும்?  

பிரபுவுடன் நட்பாக இருந்தவரை எங்கள் உறவு உறுதியாகவே இருந்தது. சில நேரம் மீடியா செய்திகள் எங்களை பாதித்திருக்கிறது. எங்களுக்குள் பிரிவு ஏற்பட்டது மிகவும் பர்சனல் விஷயம். அதை விவரிக்க முடியாது. மூன்றரை வருட உறவில் நான் நிறைய மாறி இருக்கிறேன். மற்றவர்களுக்காக மாறிக்கொள்வது என்பது எல்லோருடைய வாழ்விலும் நடப்பதுதான். இப்போது தனிமைவாசியாகி விட்டேன். அதுபற்றி எதுவும் கூற முடியாது.

நடந்த சம்பவங்களிலிருந்து நான் முழுமையாக மீள இன்னும் அவகாசம் தேவை. காதல் தோல்வி பற்றி கருத்து கேட்கிறார்கள். அதுபற்றி இப்போது சொல்ல முடியாது. நான் சினிமாவைவிட்டு விலக நினைத்தது தவிர்க்க முடியாத தருணம். காதலுக்காக நான் எதையும் செய்வேன். என் கையில் குத்தப்பட்ட பிரபுதேவா பெயரை இப்போதைக்கு நீக்கும் எண்ணம் இல்லை.
இவ்வாறு நயன்தாரா கூறினார்.




 

Post a Comment