வெற்றிமாறன் முதலில் இயக்குவதாக இருந்தப் படம் தேசிய நெடுஞ்சாலை. ஆனால் தனுஷுக்கு பொல்லாதவன் ஸ்கிரிப்ட் பிடிக்க தேசிய நெடுஞ்சாலை பெட்டிக்குள் முடங்கியது. இப்போது அதே பெயரில் ஒரு படத்தை தயாரிக்கிறார் வெற்றிமாறன். இயக்கம் அவரது உதவியாளர் மணிகண்டன். கதை, திரைக்கதை வெற்றிமாறன். இந்தப் படத்தில் ஹீரோவாக நடிப்பவர் சித்தார்த். படப்பிடிப்புக்கான ஆரம்ப வேலைகள் முடிந்த நிலையில் வரும் மே 2 ஆம் தேதி முதல் படப்பிடிப்புக்கு கிளம்புகிறார்கள். ஹீரோயின் யார் என்பது இன்னும் முடிவாகவில்லையாம்.
Post a Comment